Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏற்காட்டிற்கு பைக்கில் சென்ற தம்பதி… திடீரென்று 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பைக்… தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்….!!

60 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொசவப்பட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் பாபு(35) – சசிகலா(30). நேற்று காலையில் இத்தம்பதியர் ஏற்காட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு மாலையில் நாமக்கல்லுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் பாபு வேகமாக மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார். இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதி 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே சசிகலா உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பாபுவை  அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புதருக்குள் இருந்த சசிகலாவின் உடலை கயிற்றால் கட்டி மேலே எடுத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |