மாஸ்டர் படக்குழுவுடன் தளபதி விஜய் பொங்கல் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த படம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது . ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப் போனது . தற்போது 9 மாதங்களுக்குப் பின் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகி உள்ளது .
https://twitter.com/XBFilmCreators/status/1349944812829511680
இந்த பொங்கல் பண்டிகையை மாஸ்டர் படத்துடன் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் . இந்நிலையில் மாஸ்டர் படக்குழுவினர் சமூக வலைதளத்தில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் . அதில் கடந்த வருடம் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் பொங்கல் பண்டிகையை நடிகர் விஜய் படக்குழுவினருடன் உற்சாகமாக கொண்டாடியுள்ளார் . தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது .