Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சி செய்தி… அஞ்சல் தேர்வு இனி தமிழில்…. மத்திய அரசு அறிவிப்பு…!!

அஞ்சல் துறை பணிக்கான தேர்வை தமிழில் எழுதலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

அஞ்சல் துறையில் வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் அஙகிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுதலாம் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் அதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது. இதனை தொடர்ந்து தற்போது தேர்வை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சென்னை வட்டத்தில் நடைபெற உள்ள அஞ்சல் துறை பணிக்கான தேர்வை ஆங்கிலம், தமிழ் மற்றும் ஹிந்தியில் எழுதலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு மத்திய அரசு கடிதம் மூலமாக கூறியுள்ளது.

ஏற்கனவே வெங்கடேசன் அவர்கள் தமிழில் தேர்வை நடத்த கோரிக்கை வைத்து எழுதிய கடிதத்திற்கு பதிலாக தான் இந்த கடிதம் மத்திய அரசு மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய பணிகளில் தமிழுக்கான இடத்தை பெற்றுக் கொடுக்க தொடர்ந்து முயற்சிகள் எடுப்பேன் என வெங்கடேசன் தெரிவித்திருந்தார். மேலும் இந்தித் திணிப்பை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து நிற்கும் எனவும் அவர் கூறியிருந்தார்.

Categories

Tech |