கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் மீனவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகில் உள்ள கொட்டில்பாடு என்னும் பகுதியை சேர்ந்தவர் சிலுவை இருதயம். இவர் அந்த பகுதியில் மீனவ தொழிலை செய்து வருகிறார்.மீனவரான இவருக்கு மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். அதில் இரண்டாவது மகளுக்கு வரும் 21ஆம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கொண்டுவந்த சிலுவை இருதயம், மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக குளச்சல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.