Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கடைக்குள் புகுந்து… காய்கறிகளை வேட்டையாடிய காட்டெருமை… அச்சத்தில் பொதுமக்கள்….!!

குன்னூரில் காட்டெருமை ஒன்று கடையில் புகுந்து காய்கறிகளை வேட்டையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் கடந்த 4 நாட்களாக  ஒற்றை காட்டெருமை தூதர்மட்டம் கடைவீதியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் உலா வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக உணவு தண்ணீருக்காக ஊருக்குள்  புகுந்த காட்டெருமைகள் குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்துவதால் பொதுமக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இச்சூழலில் ஊருக்குள் திரிந்த காட்டெருமை ஒன்று  திடீரென்று சாலையோரம் இருந்த காய்கறி கடைகளில் புகுந்து கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை சுவைத்து சென்றது. ஏற்கனவே  காட்டெருமை தாக்கியதில் இப்பகுதியை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் வனத்துறையினர்  தகுந்த நடவடிக்கை எடுத்து காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டுமாறு குன்னூரை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |