Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்கள்… மிக அதிக கன மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்கள் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கு மத்தியில் இந்த மாதம் மட்டும் அல்லாமல் அடுத்த மாதமும் மழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலூர், தேனி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |