அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 லட்சத்து 100 ரூபாய் நிதியாக வழங்கியுள்ளார்
பல போராட்டங்களுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. 161 அடி உயரத்தில் 318 தூண்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக இந்த கோவிலை 2025-ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில் கட்டுவதற்கு தேவையான நிதி சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஸ்ரீ ஜென்மபூமி அறக்கட்டளை சார்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் சென்று சந்தித்து உள்ளனர். அப்போது குடியரசுத்தலைவர் 5 லட்சத்தில் 100 ரூபாய் காசோலையை கோவில் கட்டுமான பணிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும் நிதி திரட்டுவதற்கு 10 ஆயிரத்து 500 முதல் 1,000 ரூபாய் வரையிலான டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது.