ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு சாதகமான நன்மையான பலன்கள் கிடைக்கும்.
இன்று நீங்கள் பரபரப்பாக காணப்படுவீர்கள். உங்களின் செயல்களை புத்திசாலித்தனமாக ஆற்ற வேண்டும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதன்மூலம் திருப்தி காண்பீர்கள். உங்களின் பணிகளை ஆற்றுவதற்கு இது பயனுள்ளதாக இருக்கும். உங்களின் துணையுடன் வெளிப்படையாக பழகுவீர்கள். இதனால் இருவருக்குமிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். இன்று உங்களின் நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வீர்கள். பெரிய முதலீடுகள் போன்ற முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் மந்தநிலை இருந்தாலும் முயற்சி செய்வதன் மூலம் வெற்றிப் பெறலாம். இன்று நீங்கள் முருகனை வழிபடுவது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.