மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களை நீங்கள் உற்சாகமாக வைத்துக் கொள்ளக்கூடிய சூழ்நிலை காணப்படும்.
பிறரை மகிழ்விக்க முயற்சி செய்வீர்கள். நீங்கள் சிறப்பாகவும் நம்பிக்கையுடனும் உணர்வீர்கள். பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் நன்மை பெறலாம். இன்று உங்களுக்கு அதிகபணிகள் காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். மேலதிகாரிகளுடன் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மகிழ்ச்சியற்ற உணர்வு காரணமாக இன்று உறவில் திருப்தியின்மை காணப்படும். நிதிநிலைமை ஏமாற்றத்தை அளிக்கும். பண விஷயத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலையை உண்டாக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றமான நிலை காணப்படும். இன்று நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.