பென்னி குக்கின் 180 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு லோயர்கேம்ப் பகுதியில் அவரின் நினைவிடத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களுக்கு விவசாய பாசனத்திற்கு ஆதாரமாக இருக்கும் முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்த நாளையொட்டி தேனி மாவட்ட மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர். கடந்த இரு ஆண்டுகளாக இது அரசு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவரது பிறந்த நாளுக்கு அரசு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இன்று அவரது 150-வது பிறந்தநாள் விழா. இதனால் லோயர் கேம்பில் உள்ள மணிமண்டபம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அதன் முன்னால் பென்னிகுயிக் அவர்களின் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் நிகழ்ச்சியில் பல நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாலார்பட்டி, சுருளிப்பட்டி ஆகிய பகுதிகளில் கரையோர கிராம மக்கள் பொங்கல் வைத்து பென்னிகுவிக்கிற்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர். கடலில் வீணாக கலந்த தண்ணீரை திசைமாற்றி தேனி மாவட்டத்திற்கு திசை திருப்பி, அதை செழிப்பாக மாற்றிய பென்னிகுவிக்கை இன்றும் இப்பகுதி மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.