Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரிக்கும் அருவிகள்…. குளிக்க தவிக்கும் மக்கள்…. தடை உத்தரவு போட்ட போலீஸ்….!!

தென்காசி மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ராமநதி அணை, கடனாநதி அணை, குண்டாறு அணை ஆகிய மூன்று அணைகள் ஏற்கனவே நிரம்பி விட்டதால், மேலும் இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. குற்றாலம் மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பழைய குற்றாலம் மற்றும் மெயின் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று காலையில் இருந்து சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலை மீண்டும் பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் காலை அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் பாதுகாப்பு கருதி இன்று 2-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு காவல்துறையினர் குளிக்க தடைவிதித்துள்ளனர். இதேபோல ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும், புலி அருவியிலும் தண்ணீர் அதிகமாக விழுகிறது. காவல்துறையினர் குளிக்க தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

 

Categories

Tech |