சேலத்தில் அரிய வகை நாணயக் கண்காட்சி 3 நாட்கள் நடைபெற உள்ளது.
அரிய வகை நாணயக் கண்காட்சி சேலத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொண்டு நாணயங்களை கண்டு ரசித்தனர். பழங்காலங்களில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது.
சேலத்தில் அகரம் நண்பர்கள் குழு சார்பாக பழைய நாணயங்கள் அஞ்சல் தலை உள்ளிட்டவை குறித்து இந்த விழிப்புணர்வு கண்காட்சி தொடங்கியது . இந்த கண்காட்சியில் அரிய வகை நாணயங்கள் மன்னர் கால ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட அரிய வகை பொருட்கள் போன்றவை பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் 1957 முதல் 2020 வரை ஒவ்வொரு ஆண்டும் அச்சிடப்பட்ட நாணயங்களும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் மலேசியா, அமெரிக்கா ,கென்யா,இந்தோனேசியா போன்ற உலக நாடுகளின் ரூபாய்களும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கண்டு ரசித்து அரிய வகை நாணயங்கள் குறித்து ஆர்வத்துடன் தெரிந்து கொண்டனர். இன்று தொடங்கிய இந்த கண்காட்சி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற உள்ளது என நாணய கண்காட்சி ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.