நபர் ஒருவர் ஒரு பெண்ணை நீண்ட நேரமாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவைச் சேர்ந்த Burnaby என்ற 48 வயதுடைய பெண் ஒருவரை ஒரு நபர் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளார். அந்த பெண் அவரிடம் இருந்து எப்படியோ தப்பி அவசர உதவி எண்ணை தொடர்புகொண்டு காவல்துறையினரை அழைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த நபரின் வீட்டை சுற்றி வளைத்துள்ளனர். அதன் பிறகு பல மணி நேரம் அந்த நபருடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.
இதனால் இரவு 10 மணியளவில் அந்த வீட்டினுள் காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசியுள்ளனர். அதன்பிறகுதான் அந்த நபரை பிடிக்க முடிந்துள்ளது. மேலும் அந்த நபரின் பெயரோ மற்றும் அந்த பெண்ணுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து தகவலோ காவல் துறையினரால் தெரிவிக்கப்படவில்லை. மேலும் இந்த நபர் தற்போது மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் மீது பல வழக்குகள் உள்ளது. இந்நிலையில் அவரிடம் துப்பாக்கியும் இருக்கலாம் என்று கருதுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.