ரியோவின் மனைவி ஸ்ருதி சமூக வலைதள பக்கத்தில் பிக்பாஸ் கேபி குறித்து பதிவிட்டுள்ளார் .
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நிறைவடையும் நிலையில் உள்ளது . இந்த வார இறுதியில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ? என்பது தெரிந்துவிடும் . எதிர்பார்க்காததை எதிர் பாருங்கள் என்று கமல் அடிக்கடி கூறுவது போல் யாரும் எதிர்பார்க்காத விதமாக பணப் பெட்டியுடன் கேபி வெளியேறிவிட்டார் . இதனால் ரியோ , சோம் ,ஆரி ,ரம்யா, பாலா ஆகிய ஐந்து பேர் இறுதி போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில் பிக்பாஸ் ரியோவின் மனைவி சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ‘இதுதான் பிக்பாஸ் வீட்டில் கேபி என் மகள் ரித்திக்காக தைத்துக் கொடுத்த ஆடை . ரியோவிற்கு இப்படி ஒரு க்யூட் தங்கை கிடைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. லவ் யூ கேபி’ என பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ரியோவின் குழந்தைக்காக கேபி அந்த ஆடையை பரிசாக கொடுத்தது குறிப்பிடத்தக்கது.