Categories
உலக செய்திகள்

தனியார் விடுதியில்… சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட… பெண்ணின் புகைப்படம் வெளியீடு…!!

சில தினங்களுக்கு முன்பு தனியார் விடுதி ஒன்றில் சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. 

மேற்கு லண்டனில் இருக்கும் தனியார் விடுதி ஒன்றில் Joanna Borucka என்ற 41 வயதுடைய பெண் ஒருவர் காவல்துறையினரால் கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதியில் சூட்கேசில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். இதனை காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடையதாக Lithuania என்ற நாட்டை சேர்ந்த 50 வயதுடைய நபர் Petras Zalinas என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

எனவே இவர் லண்டனில் இருந்து தப்பி ஜெர்மனியில் இருக்க வாய்ப்பு உள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் ஐரோப்பிய சகாக்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர். எனினும் Petras Zalinas ஐ பிடித்தால் தான் Joannaவிற்கு என்ன நடந்தது என்பது தெரியவரும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |