Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காவல்துறையினர் மீதும் வழக்கு பதிவு ” ஹெல்மெட் கட்டாயம் ..!!

காவல்துறையினர் ஹெல்மெட் போடாமல் வாகன ஓட்டினால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார் .

தற்பொழுது ஹெல்மெட் கட்டாயமாக போடும் சட்டமானது தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் ஹெல்மெட் போடாமல் இருப்பது மக்களிடையே அதிருப்த்தியை  ஏற்படுத்தி வருகிறது.

Image result for ஹெல்மெட் அணியும் காவல்துறை

இதனால் சென்னையில் காவல் துறையில் பிறர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். காவல்துறையினர் விதிமுறைகளை கடைபிடித்தால் தான் பொதுமக்களையும் விதிமுறைகளை கடைபிடிக்க கோரி வலியுறுத்த முடியும் என்றும் கூறியுள்ளார் .

Categories

Tech |