மனிதனுக்கும் நாய்களுக்கும் உள்ள பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் விதத்தில் இசையமைப்பாளர் யதீஷ் மகாதேவா புதிய பாடலை உருவாக்கியுள்ளார் .
இசையமைப்பாளர் யதீஷ் மகாதேவா தமிழ் ,கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார் . இவர் தமிழில் வெளியான சொன்னா புரியாது, 90ml போன்ற படங்களுக்கு கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றியுள்ளார் . தற்போது இவர் டிவிஸ்டி டெய்ல்ஸ் தயாரிப்பில் செல்லப் பிராணிகளுக்கான இசை கொண்டாட்டமாக ‘ஃபாலோ ஃபாலோ மீ’ என்ற ஆங்கில இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார் .
நாய்கள் வீட்டின் ஓர் அங்கமாகிவிட்ட சூழ்நிலையில் நாய்களுக்கும் மனிதனுக்கும் உள்ள பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் விதத்தில் இந்தப்பாடல் தயாராகியுள்ளது. டிவிஸ்டி டெய்ல்ஸின் உரிமையாளரான ரேகா டேண்டே 16 பப்பிகளுடன் இணைந்து இந்த ஆல்பத்தில் நடித்துள்ளார் . ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள இந்த பாடல் அதைத் தொடர்ந்து தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவர உள்ளது .