Categories
மாநில செய்திகள்

ஓய்வு பெறும் தமிழக தலைமைச் செயலாளர்…. அடுத்து யார் வருவது….? அதிகமாக கூறப்படும் பெயர்….!!

தமிழக தலைமைச் செயலாளரான கே. சண்முகம் ஓய்வு பெறவிருக்கும் நிலையில் அடுத்த தலைமை செயலாளராக ஹன்ஸ் ராஜ் வர்மா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டின் 46வது தலைமைச் செயலாளராக கே. சண்முகம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பதவியேற்றார். அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலையில் 60 வயதை கடந்தார். அதுவே ஐஏஎஸ் அதிகாரியின் பணி ஓய்வு வயதாகும். அதன்படி கடந்த ஜூலை 31-ஆம் தேதியுடன் அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் ஆனால் அக்டோபர் 31-ஆம் தேதி வரை 3 மாதங்களுக்கு அவருக்கு பணிநீட்டிப்பு அளிக்கப்பட்டது. இதனடிப்படையில், அக்டோபர் 31ம் தேதியுடன் சண்முகத்திற்கு பணி நிறைவடையும் நிலை இருந்தது.

ஆனால் அவருக்கு மீண்டும் பணி நீட்டிப்பு வழங்க கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. அதனடிப்படையில் கடந்த நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை அவருக்கு பதவி காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் இரண்டு முறை பதவி நீட்டிப்பை சேர்த்து ஒரு ஆண்டு 7 மாதங்கள் தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றியுள்ளார் சண்முகம். மேலும் அடுத்த தலைமைச் செயலாளரை நியமனம் செய்ய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் ஹன்ஸ்ராஜ் வர்மாவின் பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.

Categories

Tech |