நடிகை ராய்லட்சுமி தனது அடுத்த படத்தில் 3 வேடங்களில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ராய் லட்சுமி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமானவர். நடிகை ராய் லட்சுமி கடைசியாக ஜெய், வரலட்சுமி சரத்குமார், கேத்தரின் ஆகியோருடன் தமிழில் நீயா 2 என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்றாலும் கூட நடிகை ராய்லட்சுமி சோர்வடையாமல் தற்போது அடுத்த படத்தில் நடிக்க தயாராகிவிட்டார்.
சிண்ட்ரெல்லா என்னும் இப்படத்தில் நடிகை ராய்லட்சுமி 3 வேடத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் நடிகை ராய்லட்சுமியுடன் கல்லூரி வினோத், சாக்ஷி அகர்வால் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். 3 வேடங்களில் 2 வேடம் வெளியிடப்பட்டுள்ளது அவை சிண்ட்ரெல்லா என்பதும் ராக்ஸ்டார் என்பதும் ஆகும். மற்றோரு வேடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது.