Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நிலத்தடி நீர்மட்டம் குறையும்… அனுமதி அளிக்க கூடாது… மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!

மதுரை ஹைகோர்ட் அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்வதை ஏற்க முடியாது என உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள அயன்பாப்பாகுடியில் ஆஸ்டின் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அந்த பகுதியில் வசிக்கும் பலர் தங்கள் நிலத்தில் நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுத்து விற்பனை செய்கின்றனர் என்றும், அரசிடம் அதற்கான உரிய அனுமதியை பெறவில்லை என்றும் கூறியுள்ளார். அதோடு சட்டவிரோதமாக இவ்வாறு நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர் மட்டமானது குறைந்துவிட்டது என்றும், அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை விற்பனை செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து நிலத்தடி நீரை உறிஞ்ச பயன்படுத்தும் ஜெனரேட்டர் மற்றும் லாரிகளை பறிமுதல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி போன்றோர் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஸ்டின் சார்பில் ஆஜரான வக்கீல் நிலத்தடி நீரை உறிஞ்சுவதை தடுக்க அதிகாரிகளுக்கு பலமுறை மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வாதாடியுள்ளார். அந்த விசாரணையின் முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் அரசிடம் அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை விற்பனை செய்து வருவதாக மதுரை வடக்கு தாசில்தார் தாக்கல் செய்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கானது நிலுவையில் இருக்கும் வரை நிலத்தடி நீரை எடுக்க அனுமதி வழங்கக்கூடாது எனவும், வர்த்தக நோக்கத்தில் நிலத்தடிநீரை எடுப்பது குற்றம் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து நீதிபதிகள் இந்த மனு தொடர்பாக அதிகாரிகள் மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |