Categories
சினிமா தமிழ் சினிமா

பரபரப்பு அறிக்கை…! தெரியாம நடந்துடுச்சு…! இனி நடக்காது… விஜய்சேதுபதி கவலை …!!

தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டு புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகர் விஜய்சேதுபதி. மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அன்போடு கொண்டாடப்படும் இவர் இளைய தளபதி விஜயுடன் நடித்த மாஸ்டர் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இதில் விஜய் அளவிற்கு மிகவும் பெருமையாக பேசப்பட்டு வரும் விஜய் சேதுபதி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக செய்திகளும், புகைப்படங்களும் பரவி வருகின்றது.

இந்த நிலையில்  நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை கொண்டாடும் போது, வால் போன்ற ஆயுதங்களால் கேக் வெட்டும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இது போன்ற ஆயுதங்களால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுபவர்களை போலீசார் கைது செய்து, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருவதால் நடிகர் விஜய் சேதுபதி மீதும் நடவடிக்கை பாயுமோ என சிலர் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய சேதுபதி இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இதனை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அதில் பிறந்தநாள் கேக்கை பட்டா கத்தியால் வெட்டி இருப்பேன்.

தற்போது பொன்ராம் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக்கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால் அந்த படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடும் போது அதே கத்தியை வைத்து கேக்கை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதம் ஆகி உள்ளது. இனிமேல் இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல் படுவேன் என்று தெரிவித்துக் கொள்கின்றேன். இச்சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றேன் என விஜய் சேதுபதி விளக்கம் தெரிவித்துள்ளர்.

Categories

Tech |