தொண்டையில் புரோட்டா சிக்கியதால் மூச்சுத்திணறி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தாமஸ் வீதியில் தனியார் நகை தயாரிக்கும் பட்டறையில் பூபாய் என்ற மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி வேலைபார்த்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்று புரோட்டா சாப்பிட்டுள்ளார் . அப்போது திடீரென அவரது தொண்டையில் ஒரு புரோட்டா சிக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்து விட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அவரை உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் பூபாய் பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.