Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தலையில் விழுந்த கால்பந்து…. பறிபோன மூதாட்டியின் உயிர்… திருச்சியில் பரபரப்பு…!!

இளைஞர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த பந்தானது மூதாட்டியின் தலையில் விழுந்து அவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் கல்லறை மேட்டு தெருவில் பாப்பாயி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 10ஆம் தேதி பாப்பாயி அவரது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு உள்ள ஒரு மைதானத்தில் இளைஞர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது, அந்த பந்தானது எதிர்பாராவிதமாக அந்த மூதாட்டியின் தலையில் விழுந்து விட்டது.

இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த அந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மூதாட்டிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |