Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விராட் கோலி பேபியை வாழ்த்திய அமுல் பேபி… வைரலாகும் ட்வீட்…!!

விராட் கோலி பேபியை அமுல்பேபி வாழ்த்திய ட்விட் இணையத்தில் வைரலாகி வருகிறது .

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் ‌. இதையடுத்து சில மாதங்களுக்கு முன் அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதாக விராட் கோலி தெரிவித்திருந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன் இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது . சமூக வலைத்தளங்களில் விராத் -அனுஷ்காவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

விராத் கோலியின் சகோதரரான விகாஸ் கோலி குழந்தையின் மென்மையான கால்கள் போர்வையில் பொருத்தப்பட்டது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார் . இந்நிலையில் வித்தியாசமான விளம்பரத்துக்கு பெயர்போன அமுல் நிறுவனம் விராத் கோலி குழந்தைக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது . அனிமேட் செய்யப்பட்ட புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவிக்கப்பட்ட இந்த ட்விட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |