Categories
டெக்னாலஜி பல்சுவை

அடுத்த 3 மாதங்களுக்கு WhatsApp – அதிரடி அறிவிப்பு …!!

ஃபேஸ்புக் நிறுவனத்தின் அங்கமான வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில், தனது புதிய தனியுரிமை கொள்கையை வெளியிட்டது. வாட்ஸ்அப் சேவையை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு, ஃபேஸ்புக்குடன் தரவுகளை பகிர்ந்துகொள்ள சம்மதம் தெரிவிக்கவேண்டும் என நிர்பந்திக்கும் வகையில் புதிய கொள்கை இருப்பதாக தகவல்கள் பரவின.

இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் தனிநபர் பாதுகாப்புக் கொள்கை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் பிப்ரவரி 8-ஆம் தேதி யார் வாட்ஸ்அப் கணக்கும் நீக்கப்படாது. இது குறித்த விளக்கங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட அவற்றை தெளிவு படுத்தும் வேலையில் இருக்கும் என கூறியுள்ளது.

Categories

Tech |