Categories
சினிமா தமிழ் சினிமா

பட்டாக் கத்தியை வைத்து கேக் வெட்டியது ஏன் ?… ட்விட்டரில் விளக்கமளித்த விஜய் சேதுபதி…!!!

பட்டாக் கத்தியை வைத்து கேக் வெட்டியதற்க்கான விளக்கத்தை அளித்துள்ளார் விஜய் சேதுபதி .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதிக்கு இன்று பிறந்தநாள் . அவருக்கு ரசிகர்களும் , பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது விஜய் சேதுபதி பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள்  கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் பட்டாக்கத்தியில் ரவுடிகள் கேக் வெட்டிய போது போலீசார் கைது செய்தனர்.  ஆனால் தற்போது ஒரு முன்னணி நடிகர் இப்படியான செயல்பாடுகளில் ஈடுபடும் போது அதே போன்ற நடவடிக்கை எடுப்பார்களா ?என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் ‌.

இந்நிலையில் இதற்கு ட்விட்டரில் விளக்கமளித்துள்ள விஜய் சேதுபதி மூன்று நாட்களுக்கு முன் என் அலுவலகத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது . தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு படத்தில் நான் நடிக்க உள்ளேன்.  அதில் பட்டாக்கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் . அதனால் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய போது அதே பட்டா கத்தியை வைத்து கேக் வெட்டினேன் . இது ஒரு தவறான முன்னுதாரணம் என பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகியுள்ளது . இனிமேல் இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல் படுவேன்.  இந்த சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.

Categories

Tech |