Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’… பொங்கல் விருந்தாக வெளியான புதிய போஸ்டர்…!!!

நடிகர் ஆர்யா ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் புதிய போஸ்டரை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வட சென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது . மேலும் இந்தப் படத்தில் கலையரசன் , ஜான் விஜய், நடராஜன், துஷாரா , பசுபதி, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைநது தற்போது இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

இந்நிலையில் பொங்கல் விருந்தாக நடிகர் ஆர்யா ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார் . அதில் 11 ஜதை குத்துச்சண்டை , சார்பட்டா பரம்பரையை  சேர்ந்த ரேவ் கண்டெடுத்த வைரமாக கபிலன் மற்றும் அவரை எதிர்த்து இடியாப்ப பரம்பரையை சார்ந்த பாயும்புலி வேம்புலி மோதுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது .

Categories

Tech |