Categories
தேசிய செய்திகள்

மக்களே..! இதை நம்புங்கள்… அதை நம்பாதீங்க…. மோடி அட்வைஸ் …!!

பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக குரலால் இசை செலுத்தப்படும் பணியை இன்று தொடங்கிவைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை காணொளி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது,கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது தொற்றிக்கான இரண்டு தடுப்பூசிகளை கண்டுபிடித்திருப்பது கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் வெற்றி பெற நமக்கு உதவும். தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு கண்காணித்து வருகிறது.

உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு, 60 சதவீத தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. அதற்காக இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும். நாடு தழுவிய தடுப்பூசி போடும் திட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோருக்கு முதல் கட்டமாக இரண்டு அளவுகளில் இரண்டு தடுப்பூசிகளை பெறுவார்கள். மேலும் மூன்று கோடி மக்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசே ஏற்கும். கொரோனாவால் நாடு முழுவதும் முடகத்தில் இருந்த போது நமக்காக முன்கள பணியாளர்களை சேவை செய்து நம்மை பாதுகாத்து வந்தனர்.

ஆகையால் அவர்களுக்கே தடுப்பூசியில் முதல் உரிமை உண்டு.உலகிலேயே இதுதான் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் ஆகும். தடுப்பூசிகளின் வளர்ச்சி குறித்து இந்திய மருத்துவர்கள் விஞ்ஞானிகள் உலகளாவிய நற்பெயரை கொண்டுள்ளனர். இதற்காக விஞ்ஞானிகள் இரவு பகல் பார்க்காமல், கடுமையாக உழைத்து குறைந்த காலத்தில் இரண்டு தடுப்பூசிகளை தயாரித்துள்ளனர். இந்தியாவில் செலுத்தப்படும் இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவையே ஆகும். எனவே யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறினார்.

Categories

Tech |