உடல் முழுவதும் மிளகாய் பொடியுடன் சடலமாக கிடந்த பெண் தொடர்பாக அவரது கணவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
பிரிட்டனில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவர் மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். இவரது இரண்டாவது மனைவி கவுர். இத்தம்பதியினர் வல்வேர்ஹோம்ப்டன் நகரில் வசித்து வந்த நிலையில் கடந்த 2018 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் கவுர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அதோடு அவரது உடல் முழுவதும் மிளகாய் பொடி போடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவரது கணவர் குர்பிரீத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது அவர்கள் வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பெண்ணொருவர் குறித்து வீட்டிற்கு சென்றுவிட்டு 50 நிமிடங்கள் ஆனா பிறகு வெளியே வந்ததாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே கவுர் கொலை செய்யப்பட்ட அன்று குர்பிரீத் கோவிலுக்கு சென்று இருந்ததால் அவரது கையில் ஏதேனும் கரை இருந்ததா என குருக்களிடம் காவல்துறையினர் விசாரித்தனர். ஆனால் அவர் கை சுத்தமாக தான் இருந்தது என கூறியுள்ளார். மேலும் நீதிமன்றத்தில் குர்பிரீத் கூறுகையில் “கவுர் வீட்டின் அறையில் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நான் எனது மனைவியை கொலை செய்யவில்லை” என உறுதியாக கூறியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.