Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு இனி முடிவுதான்…. நாட்டில் முதல் தடுப்பு மருந்து…. இவர்தான் போட்டுக்கொண்டார்….!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல்  கொரோனா தடுப்பூசி துப்பரவு பணியாளருக்கு போடப்பட்டது. 

இந்தியா முழுவதும் உள்ள 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி மும்மரமாக  நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில்  உள்ள 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் முதல் நாளில் சுமார் 3 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாபெரும்  கொரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்.

நாட்டில் முதன் முதலில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.அங்கு முதல் தடுப்பூசி துப்புரவு பணியாளர் மணிஷ்  குமாருக்கு செலுத்தப்பட்டது. அதன்பின்னர் சுகாதார பணியாளர்கள்  மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது. பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனரான மருத்துவர் ரன்தீப் குலேரியாவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை  போட்டுக்கொண்டார்.

Categories

Tech |