Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் பரபரப்பு…! ”400 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்”…. ராணுவ தளபதி எச்சரிக்கை …!!

ராணுவத் தளபதியின் நரவனே ஜம்மு காஷ்மீர் எல்லை வழியாக 300-400 பயங்கரவாதிகள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக எச்சரிக்கை செய்துள்ளார்.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நடத்தப்பட்ட ராணுவ தின பேரணியில் ராணுவ தளபதி எம்எம் நரவனே பங்கேற்று வீரர்களிடையே உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது “பாகிஸ்தானின் அத்துமீறலில் 44 % காஷ்மீர் எல்லைப் பகுதியில் அதிகரித்துள்ளதாகவும் இதை முறியடிக்க இந்திய ராணுவ வீரர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். சுமார் 200க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கடந்த ஆண்டு ராணுவ வீரர்களால் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் ஏவிவிடும் பாகிஸ்தான் தற்சமயத்தில் 300-400 பயங்கரவாதிகளுக்கு நன்கு பயிற்சி அளித்து இந்தியாவிற்குள் ஊடுருவ தயார் நிலையில் வைத்துள்ளது.மேலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 29 திட்டங்களுக்கு சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மேலும் ராணுவ தளவாடங்களை நவீனமயமாக்குவதற்கு  அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.” என கூறியுள்ளார்.

Categories

Tech |