நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் திட்டம் தொடங்கப்பட்டு 5மணி நேரம் கழித்தே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி உள்ளிட்ட சில இடங்களில் இருக்க கூடிய மருத்துவமனைகளில் வேலை பார்க்கக் கூடிய சில மருத்துவர்கள் இந்த கொரோனா தடுப்பு ஊசியை தாங்கள் போட்டுக் கொள்ளப் போவதில்லை என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார்கள்.
டெல்லியில் இருக்கக்கூடிய சில அரசு மருத்துவமனையில் இருக்கும் மருத்துவ சங்கங்களை சேர்ந்தவர்கள் கூட இந்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார்கள். இதேபோல பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இருக்கக்கூடிய மருத்துவமனைகளில் செயல்படக்கூடிய சங்கங்களும் இந்த முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது முன் களப் பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட கூடிய பணிகள் நடந்து வந்தாலும், ஏற்கனவே இதற்காக பதிவு செய்தவர்கள் கூட தற்போது இந்த அந்தந்த சங்கங்கள் சார்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை அடுத்து தடுப்பூசி போட தயங்குகின்றார்கள்.
கொரோனா தடுப்பூசி கான விண்ணப்ப படிவங்களில் இருக்கக்கூடிய சில அம்சங்கள் சந்தேகத்தை கிளம்புவதாக சொல்லி, தற்போது இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்வராமல் இருந்திருக்கிறார்கள். ஒரு மையத்தில் 100 பேருக்கு வரை இந்த தடுப்பூசி முதல் கட்டமாக போடுவதற்கு திட்டங்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் சில மையங்களில் வெறும் 10த்திலிருந்து 20 நபர்கள் மட்டுமே போடப்பட்டு இருப்பதாக சொல்லப் பட்டிருக்கிறது.
இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இருக்கக்கூடிய கோவின் செயலி இன்னும் பொது மக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்படவில்லை. மருத்துவர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் பயன்பாட்டிற்கு மட்டும் தான் அது கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் கூட அதில் சில தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பதாகவும், உரிய நேரத்தில் அந்த குறுஞ்செய்திகள் வருவது அல்லது இவர்களுடைய பெயர் பதிவேற்றம் செய்யப்பட்டு அது போன்ற சில முக்கியமான தகவல்களையும் அப்டேட் ஆகாமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளும் முன் களப்பணியாளர்கள் குழப்பத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.