Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணும் பொங்கல் சிறப்பு… திருச்செந்தூர் முருகன் கோவில்… பக்தர்கள் கூட்டம் அலைமோதல்..!!!

காணும் பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காணும் பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகம், விஸ்வரூப தீபாராதனை, அதன்பின்னர் உச்சிகால அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் பரிவேட்டைக்காக கோவிலில் இருந்து புறப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கும் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து கிரிபிரகாரம் வழியாக சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து மீண்டும் கோவிலை வந்தடைந்தார். காணும்பொங்கலுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்தனர். அதிகாலையில் இருந்தே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடலில் நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கடற்கரைக்கு யாரும் செல்லாத வகையில் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். இதனால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

Categories

Tech |