Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்றீங்க… பெண் செய்ற வேலையா இது… கைது செய்த காவல்துறை…!!

மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக ஒரு பெண்ணை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஈசானி தெருவில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சீர்காழி போலீஸ் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில், போலீசார் ஸ்டாலின், தினேஷ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் முருகன் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சீர்காழி ஈசானி தெருவில் வசித்துவரும் காளிதாஸ் மனைவி அமுதா என்பவர் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.  இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ததோடு, அவர் பதுக்கி வைத்திருந்த மதிப்பு ரூபாய் 50,000 மதிப்புள்ள 419 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |