Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சின்ன சண்டைதான்… பெண் எடுத்த விபரீத முடிவு… தவிக்கும் குழந்தைகள்…!!

கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பாலக்கரைகடை பகுதியில் சிங்காரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்ட காரணத்தால், மனமுடைந்த புவனேஸ்வரி தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

அப்போது அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து படுகாயமடைந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் புவனேஸ்வரி பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் திருக்குவளை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். அதோடு இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதால் நாகப்பட்டினம் உதவி கலெக்டரும் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Categories

Tech |