பீகாரில் உள்ள குற்றங்கள் கட்டுப்படுத்தவில்லை என்றால் ஜனாதிபதியிடம் போய் முறையிடப் போவதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் இண்டிகோ கம்பனி மேனேஜர் ரூபேஷ் சிங் மர்ம மனிதர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ரூபேஷ் கொலை வழக்கு தொடர்பாக முதலமைச்சர் நிதீஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். யாரிடம் நிதிஷ்குமார் முறையிடுகிறார்? தொடர்ந்து 16 ஆண்டுகளாக முதல்வராக இருந்து வருகிறார். மேலும் உள்துறை அவரிடம் உள்ளது. அப்படி இருக்கும்போது யாரிடம் முறையிடுகிறார்? எதிர்க்கட்சிகளிடமா?இன்னும் ஒரு மாதத்திற்குள் குற்றங்கள் கட்டுக்குள் வரவில்லை என்றால், அதன் பின்னர் மெகா கூட்டணி எம்எல்ஏக்கள் டெல்லி சென்று ஜனாதிபதியிடம் இங்கு உள்ள உண்மை நிலை குறித்து புகார் அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.