Categories
தேசிய செய்திகள்

ஐயா ஜாலி…! கண்காட்சி ஆரம்பிச்சாச்சு…! ஆன்லைனிலேயே டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்… மகிழ்ச்சியில் மக்கள்…!

ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனையாக தொடங்கியுள்ளது.

கர்நாடக மாநிலம் எலகங்காவில் உள்ள விமானப்படை தளத்தில், ஆசியாவின் மிகப் பெரிய விமான கண்காட்சியான 13ஆவது ஏரோ இந்தியா-21 கண்காட்சி வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 7 தேதி வரை நடைபெற உள்ளது.கொரோனா தொற்றின் பரவல் காரணமாக கண்காட்சியில் நுழைவு டிக்கெட்டுகள் தற்போது ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காலை 9 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை அல்லது 1.30 முதல் 6 மணி வரை கண்காட்சியை பார்ப்பதற்கு இந்தியர்களுக்கு 2500 ரூபாயும்  வெளிநாட்டவர்களுக்கு 75 டாலர்களும் டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கண்காட்சியை ஒரு நாள் முழுவதும் கண்டுகளிக்க நினைக்கும் இந்தியர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும், வெளிநாட்டவர்களுக்கு 150 டாலர் களும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தைத் தாண்டி அதிக நேரம் உள்ளே இருந்தால் இந்தியர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும்,வெளிநாட்டவர்களுக்கு 150 டாலரும் அபராதமாக வசூலிக்கப்படும்.மேலும் பார்வையாளர்கள் அனைவரும் 72 மணி நேரத்திற்கு முன்னதாக பெறப்பட்ட கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதனை கட்டாயமாக கண்காட்சியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |