நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாரான ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து மிரட்டியுள்ளார் . மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ,சஞ்சீவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியான இந்தப் பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர் .
தமிழக திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப் பட்ட நிலையிலும் மாஸ்டர் படத்தைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர் . இந்த படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி பிலிம் கிரேட்டர்ஸ் தெரிவித்திருந்தது . இந்நிலையில் முதல் மூன்று நாட்களில் இந்த படம் ரூ.100 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.