தேனி மாவட்டத்தில் இளைஞரை 7 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார் என்பவர். இவர் நேற்று குள்ளப்புரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம்,பிரபு ஆகியவர்களுடன் மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சண்டையிட்ட அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
நவீன் குமார் நேற்று இரவு அணைக்கரைப்பட்டி கிராமத்தில் தன் நண்பர்கள் ராஜா, ஜெகதீஸ் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரபு,செல்வம் உள்பட ஏழு பேர் கொண்ட கும்பல் நவீன்குமாரை கத்தியால் குத்திக் கொலை செய்து செய்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நவீன்குமார் என் நண்பர்கள் தடுக்க முயன்ற போது நண்பர்கள் இருவரையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது.
பலத்த காயமடைந்த நவீன் குமாரின் நண்பர்கள் இருவரையும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து ஆண்டிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட பிரபு, செல்வம், நேசமணி ஆகிய 3 பேரை கைது செய்து மீதமுள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.