ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ஒரு லட்சம் நிதியுதவி அளிப்பதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
உலகில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு கொரானா வைரஸ் தொற்றும் அதனால் நிகழும் மரணங்கள் காட்டிலும் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமையில் வாடுகின்றனர். இதனிடையே தற்போதைய ஜனாதிபதி ட்ரம்பை விட சிறப்பான முறையில் கொரானா வைரஸ் பிரச்சினையை கையாளுவேன் என்று பிரச்சாரத்தில் ஜோ பைடன் கூறினார்.
இந்நிலையில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அவர் வருகிற 20-ஆம் தேதி பதவியேற்க உள்ளார். பிரச்சாரத்தில் கூறியது போல , கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவிடுவதற்கான திட்டத்தை ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் இந்திய மதிப்பு சுமார் 138 லட்சத்து 811 கோடி ஆகும். இந்த திட்டத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் கொடுக்குமானால் இதன் மூலம் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா 1,500 டாலர் அதாவது இந்திய மதிப்பில் ஒரு லட்சம் நிதி உதவி கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும் கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கு வாரம் தோறும் வழங்கப்படும் நிவாரணத் தொகை 300 டாலரில் இருந்து 400 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 29 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.