பிக்பாஸ் யாஷிகா ட்விட்டரில் பொங்கல் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் நடிகை யாஷிகா ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். இவர் சமீபத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு அசத்தலாக நடனமாடி இருந்தார். தற்போது இவர் ராஜபீமா , இவன் தான் உத்தமன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் .
Happy pongal to my Twitter fam ✨💯 pic.twitter.com/JMXHLbHpIi
— Yashika Anand (@iamyashikaanand) January 14, 2021
நடிகை யாஷிகா தனது சமூகவலைத்தள பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருபவர். இந்நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு மணப்பெண் போல அலங்காரம் செய்து நடிகை யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்துள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .