சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெண்ணை மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவிற்கு சீர்காழி அருகே உள்ள ஈசானிய தெரு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் தனிப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் அங்கு அமுதா என்ற பெண்சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும், இவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்து வந்துள்ளார். அதன் பின் அவரிடம் இருந்து 200 தமிழ்நாட்டு மது பாட்டில்கள் மற்றும் 219 புதுச்சேரி மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அமுதாவை கைது செய்தனர்.