Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கண்டுகாமல் சென்ற கார்… துப்பாக்கி முனையில் மடக்கிய போலீசார்… சிக்கிய குற்றவாளிகள்..!!

பயங்கர ஆயுதங்களுடன் காரில் சென்ற இரண்டு குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் டவுன் போலீசாருக்கு பல்வேறு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் அரக்கோணம் சாலையில் ஒரு காரில் வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த சாலைக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டியுள்ளனர்.

ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் அந்த காரானது சுவால்பேட்டை வழியாக அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் அந்த காரை துப்பாக்கிமுனையில் மடக்கி விட்டார். இதனையடுத்து அந்த காரில் இருந்தவர்கள் திருத்தணியில் நடந்த ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான சர்குணம் என்பதும், மற்றொருவர் முன்னாள் கொலைக் குற்றவாளியான சசிகுமார் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதனைதொடர்ந்து அவர்களை கைது செய்து போலீசார், தலையில் பலத்த காயமடைந்த சசிகுமாரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன்பின் அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து போலீசார் அந்த காரில் சோதனை செய்தபோது அதில் இரும்பு கம்பிகள், பட்டா கத்திகள் போன்ற பயங்கர ஆயுதங்களும், பல்வேறு கட்சி கொடிகளும், எம்பளம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்கள் போன்றவை இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் அந்த காரை பறிமுதல் செய்த போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |