நீலகிரி மாவட்டம் முதுமலையில் 27 வளர்ப்பு யானைகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தெப்பக்காடு யானைகள் முகாமில் 27 வளர்ப்பு யானைகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. யானைகளுக்கு நெற்றியில் விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் பூசப்பட்டது. யானைகளுக்கு பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ராகி, கேழ்வரகு இனிப்பு பொங்கல், ஊட்டச்சத்து மாத்திரைகள், கரும்பு ,பழங்கள் அடங்கிய உணவுகள் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தன. விநாயகர் கோவிலில் வன அதிகாரிகள் வழிபாடு நடத்திய பின்னர் யானைகளுக்கும் பூஜை செய்யப்பட்டது. பின்னர் யானைகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.