புகழ்பெற்ற திருநள்ளார் சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருநள்ளாறு தற்பாரணி ஈஸ்வரர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா கடந்த டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து நாடு முழுவதிலும் இருந்து திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந் நிலையில் பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.