Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போடுவதற்கு முன்பு… இது கட்டாயம்…!!!

தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்பு பூர்த்தி செய்யும் விண்ணப்ப படிவத்தில் கையெழுத்திடுவது மிகவும் அவசியம்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது.

அதன்படி இந்தியாவில் நேற்று கொரோனா தடுப்பு ஊசி மக்களுக்கு செலுத்தப்பட்டது. அவ்வாறு கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து இடுவது கட்டாயம் என்று மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “தடுப்பு மருந்து இன்னும் பரிசோதனையில் உள்ளதை நான் அறிவேன். இன்னும் அது கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பு தரும் என ஆய்வு முடிவுகள் வரவில்லை என தெரியும். தெரிந்துதான் தடுப்பூசி எடுத்துக் கொள்கிறேன்.

தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட பிறகு ஏதேனும் பாதகமான நிகழ்வு ஏற்பட்டால் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மற்றும் அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளில் தரமான பராமரிப்பு ஏற்றுக்கொள்வேன். பாதகமான நிகழ்வுகளை இழப்பீடு தடுப்பூசியுடன் தொடர்புடையது என்று நிரூபிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு செலுத்தப்படும்” என்ற அந்தக் கையெழுத்து படிவத்தில் குறிப்பிடபட்டுள்ளது.

Categories

Tech |