நடிகர் சிம்புவின் ‘பத்துதல’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் திரையரங்கில் வெளியான ‘ஈஸ்வரன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் தயாரான இந்தப் படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார் . பொங்கல் விருந்தாக திரையரங்கில் வெளியான இந்த படத்தை பார்த்த பலரும் பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். இதையடுத்து நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் ‘மாநாடு’ திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது .
#PathuThala #ObelinKrishna #Studiogreen#SilambarasanTR45 #studiogreen20#pathuthalai #pathuthalaiofficial#STR#SilambarasanTR #GauthamKarthik #Priyabhavanishankar #Teejay pic.twitter.com/vq16dMlJU6
— Silambarasan TR (@SilambarasanTR_) January 16, 2021
இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறைந்துவிடும் எனக் கூறப்படுகிறது . இதன் பின்னர் நடிகர் சிம்பு இயக்குனர் கிருஷ்ணா இயக்கவுள்ள ‘பத்துதல’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஜனவரி 18ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்கில் ஈஸ்வரன் படமும் சமூக வலைத்தளத்தில் மாநாடு மோஷன் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. தற்போது இந்த அறிவிப்பால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.