மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் நேருக்கு நேர் மோதியதில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சீர்காழி கோவில் தெருவில் ரமேஷ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் பழையாறு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிள் ஓலகொட்டாய்மேடு அருகில் சென்று கொண்டிருந்தபோது, எருக்கூர் கிராமத்தில் வசித்து வரும் யுவராஜ் என்பவர் ஓட்டி வந்தார் மோட்டார் சைக்கிள் ரமேஷின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இது படுகாயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து புதுபட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பின் பலத்த காயமடைந்த சிவராஜை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.