முகக் கவசம் அணிந்து வருமாறு கூறிய காவலாளியை தாக்கிய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள ஆரப்பாளையம் பகுதியில் உள்ள தியேட்டருக்கு முக கவசம் அணியாமல் ஐந்து வாலிபர்கள் படம் பார்க்க வந்ததுள்ளனர். இதனால் அவர்களிடம் முக கவசம் அணிந்து தான் உள்ளே வரவேண்டும் என அங்கிருந்த காவலாளி கதிரேசன் என்பவர் கூறியிருக்கிறார்.
அப்போது அவருக்கும் அந்த வாலிபர்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அந்த ஐந்து வாலிபர்களும் காவலாளியை பலமாக தாக்கினர். இதனால் காயமடைந்த கதிரேசன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து கதிரேசன் அளித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்கு பதிந்து அவரைத் தாக்கிய 5 வாலிபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.