Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சிக்கனில்… புதுவகையான ரெசிபி செய்யலாம்..!!

 சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:

சிக்கன்                               – 1/2 கிலோ
வெங்காயம்                    – 3
தக்காளி                             – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்             – 4
குழம்பு மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
பட்டை                                – 1
கிராம்பு                                – 2
சோம்பு                                – 1/2 டீஸ்பூன்
சீரகம்                                   – 1/2 டீஸ்பூன்
உப்பு                                     – தேவையான அளவு
எண்ணெய்                        – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை    – சிறிது

செய்முறை:

முதலில் சிக்கனை ஒரு பாத்திரத்தில் சிறு துண்டுகளாக நறுக்கியபின், தண்ணிரில் சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்,கொத்தமல்லிதழையை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். மேலும் இஞ்சி, பூண்டின் தோல் நிக்கியபின்,மிக்சிஜாரில் போட்டு பேஸ்டாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

பின்னர் கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம் சேர்த்து தாளித்ததும், அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதங்கியதும், அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு அதனுடன் அரைத்த பேஸ்ட் கலவையை போட்டு நன்கு கிளறி விட்டு, பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி விடவும்.

அடுத்து அதில் நறுக்கிய சிக்கனை சேர்த்து, சில நிமிடம் நன்கு பிரட்டி விட்டபின், அதில் குழம்பு மிளகாய் தூளை  சேர்த்து கிளறி விட்டபின், அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, சிறிதளவு உப்பு தூவி சில நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.

இறுதியில் சிக்கன் வேகும் வரை நன்கு கொதிக்க வைத்து கெட்டியானதும், சிறிது கிளறி விட்டபின் இறக்கி வைத்து, அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லிதழையை தூவி பரிமாறினால், ருசியான சிக்கன் கிரேவி தயார்.

Categories

Tech |